விடிந்தால் திருமணம்...ஐஜி மகள் எடுத்த விபரீத முடிவு! கண்ணீரில் மூழ்கிய குடும்பம்

Report Print Vijay Amburore in இந்தியா

பீகார் மாநிலம் பாட்னாவில், மறுநாள் திருமணத்தை வைத்துக்கொண்டு ஓய்வு பெற்ற காவல்துறை ஐஜியின் மகள் திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் காவல்துறை ஐஜி உமா சங்கர் சுடன்ஷு. இவருடைய மகள் ஸ்னிக்தா (28) பாட்னாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார்.

கொல்கத்தாவில் எம்.டி பட்டம் முடித்த ஸ்னிக்தாவிற்கும், கிஷன்கஞ்ச் மாவட்டத்தின் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி மகேந்திர குமாருக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.

கடந்த 10ம் தேதி நடைபெற்ற திருமண நிச்சயதார்தத்தின் போது, ஏராளமான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்துள்ளனர்.

இந்த நிலையில், உதயகிரி குடியிருப்புக் கட்டிடத்தின் 14வது மாடியிலிருந்து ஸ்னிக்தா குதித்து தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். இதில் அவருடைய உடல் எலும்புகள் அனைத்தும் நொறுங்கியுள்ளது.

தற்கொலைக்கான காரணம் குறித்து எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. அவருடைய செல்போனை கைப்பற்றி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஸ்னிக்தாவின் கார் ஓட்டுனரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த சில நாட்களாகவே நகரத்தில் உள்ள பல்வேறு உயரமான கட்டிடங்களை ஸ்னிக்தா பார்வையிட்டதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு கூட உதயகிரி குடியிருப்புக் கட்டிடத்திற்கு ஸ்னிக்தா வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்