அம்பானி வீட்டு பிரம்மாண்ட திருமணத்தில் தனியாக தெரிந்து அனைவரையும் ஈர்த்த பெண்மணி: யார் அவர்?

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி மகள் இஷாவின் திருமணத்தில் சாதாரண காட்டன் சேலை மற்றும் ரப்பர் காலணியுடன் மம்தா பேனர்ஜி கலந்து கொண்டது பாராட்டுகளை பெற்று வருகிறது.

சமீபத்தில் இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி மகள் இஷாவின் திருமணம் மும்பையில் நடைபெற்றது. ஆடம்பரமாக நடைபெற்ற இந்தத் திருமணத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், அம்பானி உறவினர்கள் பங்கேற்றனர்.

திருமணத்தில் பங்கேற்றவர்கள் விலைஉயர்ந்த ஆடைகள், நகைகள் அணிந்து ஆடம்பரத்தை வெளிக்காட்டினர்.

திருமணத்தில் யார் எந்த ரக ஆடை அணிந்து வந்தனர். அதில், யார் சிறப்பான ஆடை அணிந்திருந்தனர். யார் மோசமான ஆடை அணிந்திருந்தனர் என்றெல்லாம் சில ஊடகங்கள் ஆய்வு செய்து செய்தி வெளியிட்டன.

இந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் ஒருவர். அம்பானி வீட்டுத் திருமணம் என்றாலும் இவரின் உடையில் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போல தான் அணியும் சாதாரண கைத்தறி சேலை கட்டியிருந்தார். காலில் சாதாரண ரப்பர் காலணி அணிந்திருந்தார்.

அம்பானி வீட்டுத் திருமணத்தில் எளிமையாகத் தெரிந்த ஒரே ஒருவர் இவர்தான் என்று நெட்டிஸன்கள் மம்தாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

உடை மட்டுமில்லாமல் மம்தா வாழ்க்கை முறையும் எளிமையானது தான். கொல்கத்தாவில் 30- B Harish Chatterjee Street வீடு வெகு பிரபலம்.

காரணம் மம்தா, மேற்கு வங்க முதல்வரான பிறகும் கூட அரசு வீட்டுக்குச் சென்று குடியேறாமல் இதே வீட்டில் தான் எளிமையாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers