சென்னையில் கொத்து கொத்தாக இறந்து கிடந்த நாய்கள்: காரணம் என்ன? கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் 25க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரம் விளக்கு அருகே, மக்கீஸ் கார்டன் பகுதியில் உள்ள கூவம் கரையோரம் நேற்று முன்தினம் 25-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், 10-க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்தன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து நடத்திய விசாரணையில், நாய்களும், காகங்களும் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர் ஏ.எஸ்.மகாதேவன் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் போரூரில் விலங்கு நல அறக் கட்டளை நடத்தி வருகிறேன். சென்னை ஆயிரம் விளக்கு மக்கீஸ் கார்டன் கூவம் கரையோரம் நாய்கள் இறந்து கிடப்பதாக எனக்கு தகவல் கிடைந்தது.

அதன் பேரில் அங்கு சென்று பார்த்தபோது 25-க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடந்தன. அங்கு நாய்க்கு வைத்த உணவை சாப்பிட்ட பல காகங்களும் இறந்து கிடந்தன. நாய்களை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்களுக்கு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்