பிரபல நடிகரின் முதல் மனைவி நெஞ்சு வலியால் மரணம்

Report Print Raju Raju in இந்தியா

பிரபல நடிகர் வினோத் கண்ணாவின் முதல் மனைவி கீதாஞ்சலி தனது 70வயது வயதில் காலமானார்.

பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கண்ணாவின் முதல் மனைவி கீதாஞ்சலி.

வினோத் கண்ணாவின் மறைவுக்கு பின்னர் தனது மகன்களான அக்‌ஷய் கண்ணா மற்றும் ராகுல் கண்ணாவுடன் கீதாஞ்சலி வசித்து வந்தார்.

இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் இருந்த கீதாஞ்சலிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு உடனடியாக அவர் அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனில்லாமல் கீதாஞ்சலியின் உயிர் பிரிந்தது. கீதாஞ்சலியின் இறுதிச்சடங்குகள் நேற்று நடைபெற்றது.

வினோத் கண்ணா கடந்த 1971-ல் கீதாஞ்சலியை திருமணம் செய்த நிலையில் 1985-ல் விவாகரத்து செய்தார்.

இதன் பின்னர் கவிதா என்ற பெண்ணை வினோத் கண்ணா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்