அன்று பிறந்த சில மாதங்களில் 19 கிலோ எடை இருந்த குழந்தை! இன்று 8 வயதில் எப்படி இருக்கிறார்?

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் 8 வயது சிறுமிக்கு இரண்டாவது முறையாக எடை குறைப்பு சிகிச்சையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த தம்பதி யூசுப்-சாண்டாக்ரூஸ். இவர்களுக்கு ஸோயா(8) என்ற குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 11 மாதங்களே ஆன நிலையில் ஸோயா 19 கிலோ எடையுடன் இருந்தார்.

இதற்கு முன்னதாக இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த 18 மாதத்தில் இறந்த நிலையில், அந்த குழந்தையும் 22 கிலோ எடை இருந்துள்ளது.

மரபியல் ரீதியான கோளாறு காரணமாகவே எடை கூடியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோன்ற பிரச்சினை தான் ஸோயாவுக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த சிறுமிக்கு 2011-ஆம் ஆண்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அறுவை கிகிச்சை நடந்தது.

அறுவை சிகிச்சையை அடுத்து ஸோயாவின் வயிறு விரிவடைந்தது. முதல் அறுவைசிகிச்சைக்குப் பிறகு, மேற்கொள்ளப்பட வேண்டிய உணவுக் கட்டுப்பாடுகளை ஸோயாவின் பெற்றோர் கடைபிடிக்கவில்லை.

பொரித்த உணவுகள், இனிப்புகள் மற்றும் அக்கம்பக்கத்தார் கொடுக்கும் உணவுகள் என ஸோயா தொடர்ந்து நொறுக்கு தீணிகளை அதிகம் சாப்பிட்டு வந்துள்ளார்.

பிஸியோதெரபி செய்யச் சொல்லி மருத்துவர்கள் கூறியும் அதையும் கடைபிடிக்கவில்லை, இதனால் உடல் எடை கணிசமாக அதிகரித்ததால், மூச்சுத்திணறல், சுவாசப் பிரச்சினையால் ஸோயா அவதிப்பட்டு வந்துள்ளார்.

இது குறித்து அவரின் தாயார் கூறுகையில், ஒவ்வோர் அரை மணி நேரத்துக்கும் ஒருமுறை உணவு கேட்கிறாள். வீட்டில் என்ன இருக்கிறதோ, அதைக் கொடுப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

அதன் பின்னரே இரண்டாவது முறை அறுவைசிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது. பிரபல எடைக் குறைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் மோஹித் பந்தாரி வயிறு குறைப்பு அறுவை சிகிச்சை முறையைக் கையாண்டார். இதன் மூலம் வயிற்றின் எடை குறைக்கப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சைப் பற்றி கூறுகையில், தினசரி 2,500 கலோரி உணவை உட்கொண்டு வந்துள்ளார்.

இதனால் உடல் அதிக எடை போட்டுள்ளது. அதன் காரணமாக ஸோயாவால் நிற்கவோ, நடக்கவோ முடியவில்லை.

ஆனா தற்போது மேற்கொண்டுள்ள அறுவை சிகிச்சை மூலம் வயிற்றின் அளவு 85 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

பசியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்புப் பகுதி நீக்கப்பட்டுள்ளது. வயிறு விரிந்துவிடாமல் தடுக்க, அதைச் சுற்றிலும் சிலிக்கன் வளையம் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மெல்ல மெல்ல ஸோயா இயல்பு நிலைக்கு வரமுடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் பிறந்த சில மாதங்களில் 19 கிலோ எடை இருந்த ஸோயா, தற்போது தன்னுடைய 8 வயதில் 40 கிலோ எடை இருந்துள்ளார். அதன் பின்னரே இரண்டாவது முறையாக எடைக் குறைப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்