நடிகர் சூரியை கட்டித்தழுவி கதறிய பாட்டி: பதிலுக்கு அவர் செய்த உதவி

Report Print Deepthi Deepthi in இந்தியா

கஜா புயலால் பாதிக்கப்பட்டு தனது உடைமைகளை இழந்த பாட்டிக்கு காமெடி நடிகர் சூரி உதவி செய்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் உள்ள சிறுவாவிடுதி கிராமத்துக்கு நடிகர் சூரி சென்றிருந்தார்.

சூரியைப் பார்த்ததும் அந்த பாட்டி ஒருவர் கட்டித்தழுவி வீட்டை இழந்ததைத் தெரிவித்தார். கூடவே ``வீட்டோடு தனது செல்போனும் புயலால் பாதித்துவிட்டது. இதனால் என் பேரப்பிள்ளைகளிடம் பேச முடியவில்லை" எனக் கூறி வருத்தப்பட்டுள்ளார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு வந்தபின் முதல்வேலையாக ஒரு செல்போனை வாங்கி, கூடவே சிறிது தொகையும் கொடுத்து அனுப்பி அந்த மூதாட்டியிடம் கொடுக்கச் சொல்லிக் கொடுத்துள்ளார்.

தஞ்சை கிராமங்களில் மூன்று நாள்கள் தங்கியிருந்து உதவி செய்து வந்தார் நடிகர் சூரி.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்