திருமணமான 5 மாதத்தில் குடும்பத்துடன் உயிரிழந்த கர்ப்பிணி: கணவர் மட்டும் தப்பித்தது எப்படி?

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் சாலை விபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் யாட்லபடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜூ. இவருக்கும் ஜெயஸ்ரீ (19) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்த நிலையில் ஜெயஸ்ரீ கர்ப்பமாக இருந்தார்.

இதையடுத்து தனது தாய் வீட்டில் ஜெயஸ்ரீ தங்கியிருந்தார்.

இந்நிலையில் மாமியார் வீட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது குடும்பத்தாருடன் ஜெயஸ்ரீ காரில் வந்தார்.

அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கர்ப்பிணி ஜெயஸ்ரீ, அவர் தாய் அனஷ்யா உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சமயத்தில் ஜெயஸ்ரீயின் கணவர் நாகராஜூ மட்டும் தனி வாகனத்தில் வந்ததால் விபத்தில் சிக்காமல் தப்பித்தார்

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் ஆறு பேரின் சடலத்தையும் கைப்பற்றிய நிலையில் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers