எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண் குறித்து அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தவறான முறையில் எச்.ஐ.வி. பாதிப்பு ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதில் மஞ்சள் காமாலை இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து 9 மருத்துவர்கள் அடங்கிய குழுவால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கர்ப்பிணி பெண்ணுக்கு தற்போது 8-வது மாதமாகும். ஜனவரி மாதம் 30-ந்தேதி அவருக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கணித்து உள்ளனர்.

எச்.ஐ.வி. பாதித்த கர்ப்பிணி பெண்களுக்கு தரமான சிகிச்சை கொடுத்தால் கருவில் வளரும் சிசுவுக்கு எச்.ஐ.வி. பரவுவதை 99 சதவீதம் தடுக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த கர்ப்பிணி பெண் மனது அளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் மனநல சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.

எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் 3 வகையான தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

எச்.ஐ.வி. பாதித்த கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு தாயிடமிருந்து நேரிடையாக எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு ஏற்படாது. பிரவசம் நடக்கும் போது மட்டுமே குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவ வாய்ப்பு உள்ளது.

எனவே சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவத்தின்போது மிக கவனமாக சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழு தீர்மானித்துள்ளது.

எச்.ஐ.வி. பாதித்த கர்ப்பிணி பெண்ணை முழுமையாக குணப்படுத்த முடியா விட்டாலும் அவரை வாழ்நாள் முழுக்க ஆரோக்கியமாக வாழ வைக்க முடியும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். அதற்கேற்ப அந்த பெண்ணுக்கு சிகிச்சை முறைகள் நடந்து வருகின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers