தவிக்கும் மக்களுக்கு இப்போது வரை உதவுவதால் சீமானுக்கு குவியும் பாராட்டு

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கஜா புயல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சீமான் தன்னுடைய சேவையை தொடர்ந்து செய்து வருவதால், அவரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

கஜா புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா பகுதி கடும் சேதத்தை சந்தித்துள்ளது. குறிப்பாக பிள்ளை போல் வளர்த்த தென்னை மரங்கள் சாய்ந்து கிடந்ததைக் கண்டு கண்கலங்காத நபர்களே இல்லை.

புயலின் பாதிப்பின் போது அப்போது உதவிய அரசியல் கட்சிகள், தற்போது தேர்தல் வியூகம், கூட்டணி குழப்பம், என்று பரபரப்பாக உள்ளது.

இதில் டெல்டா பகுதி மக்களை மறந்துவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சில விவசாயிகள் தற்கொலையும் செய்தனர்.

இது போன்ற சமயத்தில் தான் சீமானின் பேச்சு அங்கிருந்த மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

மனம் உடைந்து போயுள்ள தென்னை உள்ளிட்ட விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சீமான் தனது உரையை நிகழ்த்தி வந்தார்.

சீமானின் ஊக்கமளிக்கும் இந்த பேச்சிற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டது.

பலருக்கு நம்பிக்கை பிறந்தது. கிட்டத்தட்ட இது கவுன்சிலிங் போலதான். இதனை பெரும்பாலும் வேறு யாரும் செய்யவில்லை. இந்த விதத்தில் சீமானின் பங்கு முக்கியமானதாக இருந்தது.

விவசாயிகளை மனதளவில் பக்குவப்படுத்திவிட்டு, அவர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வினை கையில் எடுத்தார்.

50 ஆயிரம் தென்னங்கன்றுகளை தருவதாக கட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன

இழந்தது கிடைத்தது விவசாய மக்களோடு தோள் மீது கை போட்டு கொண்டு, பரஸ்பரம் உரையாடி சீமான் ஒவ்வொரு தென்னங்கன்றையும் தருகிறார்.

அதனை பெற்றுக் கொண்ட விவசாயிகளுக்கு என்னவோ போன வாழ்வு திரும்பவும் வந்ததுபோல உணர்வதாக கூறியுள்ளனர்.

நேற்று கூட, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தெற்குகோட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பாக புயலும் புனரமைப்பும் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்ட வேளாண்பெருங்குடி மக்களுக்குத் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...