மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை! சோகத்தில் குடும்பம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மனைவி பிரிந்து சென்றதால், கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படாக்குறிச்சி காலனியை சேர்ந்தவர் அங்கமுத்து. இவருக்கு சரவணன் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் சரவணனின் மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக, தன்னுடைய தாய் வீட்டிற்கு கோபித்துக் கொண்டு சென்றுள்ளார்.

இதனால் மன்முடைந்த கணவன் அவரை தன்னுடைய வீட்டிற்கு வரும் படி அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வராத காரணத்தினால் மனமுடைந்த சரவணன் நேற்று முன் தினம் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

இதனால் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்