வெளிநாட்டில் என்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம்! 2வது கணவருக்கு எதிராக போராட்டம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

குவைத்தில் செவிலியராக பணியாற்றி வரும் பிரபா என்பவர் ரூ.15 லட்சம் மோசடி செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து பிரபா கூறுகையில், எனக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகி விட்டது. தற்போது நான் குவைத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறேன்.

அங்கு பணி செய்தபோது, அங்கு பணியாற்றிய தஞ்சை மாவட்டம் குருவாடியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன்.

அப்போது அவர் என்னிடம், தஞ்சையில் தொழில் செய்யலாம் என்றும் அதற்கு நிதி உதவி செய்யுமாறும் கூறினார். நான் அவரை நம்பி ரூ.15 லட்சம் கொடுத்தேன்.

மேலும், என்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போகிறார். உன்னுடன் வாழ முடியாது என்று கூறிவிட்டார், எனவே அவரிடம் இருந்து எனது பணத்தை வாங்கிதாருங்கள் என கூறியுள்ளார்.

என்னை கொலை செய்துவிடுவதாக தொடர்ந்து மிரட்டல் விடும் அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரியுள்ளார்.

பொலிசார் வழக்குப்பதிவு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து பிரபாவை பொலிசார் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்,

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்