ஆட்டோவில் இருந்த 3 லட்சம்! ஓட்டுநரின் செயலால் குவியும் பாராட்டுக்கள்

Report Print Kabilan in இந்தியா

சென்னையில் ஆட்டோவில் தவறவிட்ட 3,80,000 பணத்தை, அதற்குரிய நபரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தூத்துக்குடியைச் சேர்ந்த முகமது அசாருதீன் என்பவர் சென்னைக்கு கார் வாங்குவதற்காக வந்துள்ளார். கோயம்பேடு அருகே ஆட்டோவில் பயணித்த அவர், தான் கொண்டு வந்த பணப்பையை ஆட்டோவிலேயே தவறவிட்டு விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், சிறிது தூரம் கடந்த பின்னர் ஆட்டோவில் பை ஒன்று இருந்ததைப் பார்த்த ஓட்டுநர் பார்த்திபன் அதனை திறந்து பார்த்துள்ளார். அதில் 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணமும், மடிக்கணினி ஒன்றும் இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்த பையை உரிமையாளரிடம் ஒப்படைக்க பார்த்திபன் கோயம்பேடு சென்றுள்ளார்.

ஆனால், பையின் உரிமையாளர் அங்கு இல்லாததால் கோயம்பேடு காவல்நிலையத்தில் அந்த பணப்பையை ஒப்படைத்தார். அதன் பின்னர் பணப்பை காணாமல் போனதாக புகார் கொடுக்க அங்கு வந்த அசாருதீனிடம் காவல்நிலையத்தில் இருந்த பார்த்திபன் பணப்பையை ஒப்படைத்தார்.

இந்த விடயத்தை அறிந்த சென்னை பொலிஸ் கமிஷ்னர், ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபனை நேரில் வரவழைத்து பாராட்டி வெகுமதி அளித்தார். தற்போது பார்த்திபனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்