தந்தை அவரது தம்பியோடு சேர்ந்து என்னை சீரழித்தார்: 14 வயது சிறுமி பகிர்வு

Report Print Deepthi Deepthi in இந்தியா

கோயம்புத்தூரில் 14 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை மற்றும் சித்தப்பால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பகிர்ந்துகொண்டதையடுத்து தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை தெலுங்குபாளையத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் கெட்ட நோக்கத்துடன் தொடுதல் என்ற தலைப்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 14 வயதுச் சிறுமி ஒருவர் மாவட்ட குழந்தைகள் மைய அதிகாரிகளிடம் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து பகிர்ந்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக எனது தந்தையும், இரண்டு சித்தப்பாவும் எனஙககு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனை வெளியில் சொல்லமுடியாமல் தவித்தேன் என்று பகிர்ந்துள்ளார்.

சிறுமியின் புகாரின் அடிப்படையில், அவரது தந்தை, சித்தப்பா என இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ஒரு சித்தப்பாவை தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியை தற்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் பராமரிப்பில் காப்பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்