தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன்: காரணம் என்ன?

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் தந்தையை கழுத்தறுத்துக் கொலை செய்த மகன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த வஞ்சூரை சேர்ந்தவர் கண்ணன். கறிக்கடை நடத்தி வந்த இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் தவறான உறவு இருந்துள்ளது.

இதற்கிடையில், கடந்த 13ஆம் திகதி கண்ணனின் மனைவி நிர்மலா உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு கண்ணனுக்கும், முதலாம் ஆண்டு கல்லூரி பயின்று வரும் அவரது மகன் பிரபுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியுள்ளது.

அப்போது, தனது தாய் நிர்மலாவை நீ முறையாக கவனிக்காததால் தான் அவர் உயிரிழந்தார் என பிரபு குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து ஏற்பட்ட ஆத்திரத்தில், கறிவெட்டும் கத்தியை எடுத்து தந்தையின் கழுத்தை பிரபு அறுத்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர் காட்பாடி காவல் நிலையத்துக்கு நேராக சென்ற பிரபு நடந்தவற்றை கூறி சரணடைந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்