பேராசிரியரின் அழைப்பை ஏற்று நம்பி வீட்டிற்கு சென்ற இளம்பெண்: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Vijay Amburore in இந்தியா

அசாம் மாநிலத்தில் ஆயுள் காப்பீடு முகவரிடம் அத்துமீறிய கணித பேராசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் ஆயுள் காப்பீடு முகவராக பணிபுரிந்து பெண் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், குவஹாத்தியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஒப் டெக்னாலஜியில் கணிதப்பேராசிரியராக பணிபுரிந்து வரும் கேவி ஸ்ரீகாந்த், ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும் என போன் செய்து வீட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

அதனை நம்பி நானும் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு அவர் திடீரென என்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்றார் என குறிப்பிட்டிருந்தார்.

இதன் பேரில் வழக்கு பதிவு செய்து பொலிஸார் சனிக்கிழமையன்று பேராசிரியை கைது செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்