அக்கா வயது பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய மருத்துவர்: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் பல் மருத்துவரை நம்பி, 4 மாத கர்ப்பத்தைக் கலைத்த பெண் மருத்துவர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

முகப்பேரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் பல் மருத்துவர் ஒருவர் மகளிர் பொலிசில் அளித்துள்ள புகாரில், பல் மருத்துவரான நான், சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை பல் மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறேன்.

அதே கல்லூரியில் பல் மருத்துவர் லிங்கேஸ்வர் காந்தன் என்பவர், முதுகலை பல் மருத்துவம் முதலாமாண்டு படித்துவருகிறார். ஒரே கல்லூரி என்பதால், எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. ஒன்றரை மாதங்களாக கணவன், மனைவி போல ஒரே வீட்டில் வாழ்ந்தோம். அப்போது நான் கர்ப்பமடைந்தேன். இருவரும் படிப்பதால், கர்ப்பத்தைக் கலைக்கும்படி லிங்கேஸ்வர் கூறினார்.

கர்ப்பத்தைக் கலைப்பதற்கு முன், கண்டிப்பாக என்னைத் திருமணம் செய்துகொள்வதாக அவர் எனக்கு உறுதியளித்தார்.

அதன்பிறகுதான் நான் கர்ப்பத்தைக் கலைக்க சம்மதித்தேன். கடந்த 28.10.2018-ல் எனக்கு மருத்துவமனையில் கர்ப்பம் கலைக்கப்பட்டது. அப்போது, என்னோடு லிங்கேஸ்வர் தங்கியிருந்தார்.

அவர்தான் எல்லா உதவிகளையும் எனக்குச் செய்தார். அதன்பிறகு, என்னுடைய பெற்றோர் என்னை சொந்த ஊருக்கு அழைத்துச்சென்றுவிட்டனர். அங்கு, மூன்று வாரங்களாக நான் சிறைவைக்கப்பட்டேன்.

பின்னர் படிப்பதற்காக வீட்டிலிருந்து சென்னை வந்தேன். லிங்கேஸ்வர் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. இந்தச் சமயத்தில் லிங்கேஸ்வரிடம் என்னைப் பதிவு திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினேன். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. பாதிக்கப்பட்ட எனக்கு நீதிகிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து விசாரித்து வரும் பொலிசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலம் கருதி அவரின் பெயர், விவரங்களை வெளியில் தெரிவிக்கவில்லை. இருப்பினும் பல் மருத்துவர் லிங்கேஸ்வர் குறித்து விசாரித்துவருகிறோம். அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளோம். அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் கூறுகையில், நானும் அவரும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். மதம், வயது ஆகியவற்றைக் காரணம் காட்டி எங்களைப் பிரிக்கின்றனர். என்னுடைய கடந்த கால வாழ்க்கையும் லிங்கேஸ்வரின் கடந்த கால வாழ்க்கையும் எங்கள் இருவருக்கும் தெரியும். தற்போதுகூட அவரோடு வாழத்தான் விரும்புகிறேன் என கூறினார்.

லிங்கேஸ்வரின் அப்பா லட்சுமி காந்தன் கூறுகையில், என் மகன் மீது பொலிசில் புகார் கொடுத்த பெண் லிங்கேஸ்வரனை விட 3 வயது அதிகமானவர்.

என் மகனுக்கு அக்காள் மாதிரி இருக்கும் பெண்ணை எப்படித் திருமணம் செய்து வைக்க முடியும். இதற்கிடையில் கர்ப்பதைக் கலைத்ததாக அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். அந்தக் குழந்தைக்கும் என் மகனுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை.

புகார் கொடுப்பதற்கு முன் இருவீட்டினரும் பேசி திருமணம் செய்துவைக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் பலவகையில் எங்களை அவமானப்படுத்திய அந்தப் பெண்ணை இனிமேல் என் மகனுக்குத் திருமணம் செய்துவைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. வழக்கை சட்டரீதியாகச் சந்திக்க முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்