2வது திருமணம் சிறப்பாக நடக்கணும்! திருப்பதியில் உருகி வேண்டிய ரஜினியின் மகள்

Report Print Raju Raju in இந்தியா

மறுமணம் சிறப்பாக நடக்கவும், நல்ல வாழ்க்கை அமைய வேண்டியும் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா தாயுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை முதலில் திருமணம் செய்தார்.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில், கோவையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகனை, சௌந்தர்யா மறுமணம் செய்ய உள்ளார். நிச்சயதார்த்தமும் நடந்துவிட்டது. திருமணம், அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், சௌந்தர்யா தன் தாய் லதா ரஜினிகாந்துடன் நேற்றிரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றார். இவர்களுடன், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என 20 பேர் உடன் சென்றனர்.

இன்று காலை சிறப்பு தரிசனத்தில் ஏழுமலையானை, சௌந்தர்யா, லதா தரிசனம் செய்தனர்.

மறுமணம் தடங்கலின்றி சிறப்பாக நடைபெற வேண்டுமென்று சாமியிடம் சௌந்தர்யா வேண்டிக்கொண்டார்.

இதோடு திருமண அழைப்பிதழை ஏழுமலையானின் திருப்பாதங்களில் வைத்துப் பூஜித்து பெற்றுக் கொண்டார் சௌந்தர்யா.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்