குடிபோதையில் தள்ளாட்டம்! முதன் முறையாக வாய் திறந்த நடிகர் சக்தி

Report Print Kabilan in இந்தியா

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய செயலுக்காக நடிகர் சக்தி தனது பேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

நடிகரும், இயக்குநர் பி.வாசுவின் மகனுமான சக்தி, நேற்றைய தினம் சென்னை சூளைமேட்டில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் ஜாமீனில் வெளியில் வந்த அவர், தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டு பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,

‘நேற்றைய செயலுக்காக உண்மையில் மிகவும் வருந்துகிறேன். இதுபோன்ற செயல் மீண்டும் நடக்காது என்பதை உறுதி கூறுகிறேன். இந்தச் சம்பவம் எனக்கு ஒரு பாடம்.

உண்மையாக வருந்துகிறேன் நண்பர்களே.. என்னை மன்னித்து விடுங்கள். அத்துடன் குடித்துவிட்டு வண்டி ஓட்டாதீர்கள்’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சக்தி குடிபோதையில் வேட்டி அவிழ்ந்து விழுவது கூட தெரியாமல் போதையில் தள்ளாடிய வீடியோ வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers