விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்ட தமிழர்- அன்று நடந்தது என்ன? மனம் திறந்த பேட்டி

Report Print Abisha in இந்தியா

கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தை சேர்ந்த அமெரிக்க மாணவரான ஆபிரகாம் மும்பை விமான நிலையத்தில் இந்தி தெரியவில்லை என்று, தமிழகத்திற்கு திரும்பி செல்ல அதிகாரி ஒருவர் கூறிய நிகழ்வு தமிழர்கள் அனைவரையும் கொதித்தெழ செய்தது.

இதுகுறித்து ஆபிரகாம் சாமூவேலிடம் பிபிசி சார்பாக எடுக்கப்பட்ட பேட்டியில் அவர் கூறியது, நான் மும்பை விமான நிலையத்தில் 33வது கவுண்டர் சென்றேன். அங்கிருந்த அதிகாரி என்னிடம் தொடர்ந்து இந்தியில் பேசினார்.

நான் அவரிடம் ஆங்கிலத்தில் பேச கேட்டு கொண்டேன் ஆனால்அவர் உனக்கு இந்தி தெரியாதா..? அப்போ தமிழகத்திற்கு போக வேண்டியது தானே…? என்று கூறிவிட்டு, என்னால் உனக்கு ஒப்புதல் வழங்க முடியாது. தமிழ் தெரிந்த அதிகாரியிடம் போய் ஒப்புதல்பெற்றுக் கொள் என்று கிண்டலாக கூறினார்.

பின்னர்இது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் முறையிட்டேன். அவர்கள் அந்த அதிகாரியை அங்குவரவழைத்தனர். அவரிடம் மன்னிப்பு கேட்க கூறினர்.

ஆனால் அவர் தான் கூறியதை திரும்பவும்கூறிகொண்டிருந்தார். அங்கிருந்த மற்ற அதிகாரிகள் என்னை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்துபேசிய ஆபிரகாம், நான் கட்சி சார்ந்த நபருக்கு டேக் செய்தது குறித்து பல விமர்சனங்கள்எழுந்துள்ளன. எந்த தலைவர்கள் அதிகம் டிவிட்டரில் செயல் பாட்டில் உள்ளனரோ அவர்களுக்குமட்டும் டேக் செய்தேன்.

மேலும் நான் அவசரமாக போட்ட போஸ்ட் அது, அதனால் அனைத்து நபர்களையும் அந்நேரம் நினைவு கூற முடியவில்லை. பொறுமையாக அந்த வேலையை செய்திருந்தால் நாம் தமிழர்கட்சி தலைவர் சீமானுக்கும் கூட டேக் செய்திருப்பேன் என்று தெரிவித்தார்.

மேலும் லண்டன் போன்ற பெரிய நாடுகளிலும் கூட விமானநிலையத்தில் அதிகாரிகள் தமிழில் பேசுகின்றனர்.ஆனால் இந்தியாவில் தமிழ் தான் தெரியும் என்று கூறியதற்கு இப்படி நடந்து கொள்வது முறையற்றது.

இது குறித்து நான் அந்த அதிகாரியை மன்னித்து விட்டாலும். ஆங்கிலம் தெரிந்த எனக்கே இதுபோன்றநிலை என்றால். தமிழ் மட்டும் தெரிந்தவர்களுக்கு என்ன நிலை என்று நினைத்து அந்த அதிகாரி மன்னிப்பு கோர வேண்டும் என்று அதற்காக உயர் அதிகாரிகளுக்கு நான் முறைபடி மின்னஞ்சல்அனுப்பி உள்ளேன்.

பலர் நான் வெளிநாட்டில் வசித்துகொண்டு இந்தியர்களை குழப்பி வருவதாககுற்றம் சாட்டி உள்ளனர். நான் இந்தி வெறுப்பாளனோ தமிழ் வெறியனோ அல்ல என்று கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்