கணவனுடன் சேர்ந்து 80 வயது தந்தையை நடுரோட்டில் தூக்கி வீசிய மகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஒசூர் பகுதியில் சொத்துக்காக 80 வயது தந்தையை நடுரோட்டில் தூக்கி வீசிய மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனராஜ் என்பவர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆவார். இவர் தனது மனைவி இறந்தபிறகு தனது மகள் மற்றும் மருமகனுடன் வசித்து வந்தார்.

மகள் தனலெட்சுமி மற்றும் மருமகன் பாலமுரளி ஆகியோர், சொத்தை பிரித்து தரக்கூறி, தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மகள் மற்றும் மருமகன் ஆகியோர், வீட்டிலிருந்த கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருட்களை தெருவில் வீசியதுடன், தந்தை என்றும் பாராமல், 80 வயதான தனராஜையும், குண்டுக்கட்டாக தூக்கி தெருவில் வீசியுள்ளனர்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பொலிசிற்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஒசூர் ஹட்கோ பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers