16 வயது மகளின் தலையை தனியாக துண்டித்த பெற்றோர்: அதிரவைக்கும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் பீகாரில் காதல் வயப்பட்ட 16 வயது மகளை அவரது பெற்றோர் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவை சேர்ந்த 16 வயது சிறுமி காணாமல் போனதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பொலிசார் சிறுமியை தேட ஆரம்பித்தனர்.

அப்போது சிறுமி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இது குறித்து பொலிசாருக்கு சிறுமியின் பெற்றோர் மீது சந்தேகம் வரவே அவர்கள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. சிறுமி ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

காதலனுடன் ஓடிப்போன பெண்ணை மீட்ட பெற்றோர் கோபத்தில் சிறுமியை தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து பொலிசார் சிறுமியின் பெற்றோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

இதனிடையில் சிறுமிக்கு இறப்புக்கு இரங்கல் தெரிவித்து அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்