தூக்கில் சடலமாக தொங்கிய சுகன்யா: கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணம் நிச்சயம் ஆன இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்தவர் சுகன்யா பொடார் (26). கல்லூரி மாணவியான இவர் நேற்று காலை தனது வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் இருந்தார்.

சுகன்யா தனது அறையை வெகுநேரமாக திறக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்த போது முகத்தில் கருப்பு துணி கட்டியிருந்த நிலையில் தூக்கில் சடலமாக தொங்கியபடி இருந்தார்.

சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் விரைந்து வந்த அவர்கள் சுகன்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள், அதில் இருந்தது சுகன்யாவின் கையெழுத்து தான் பெற்றோர் உறுதி செய்தனர்.

கடிதத்தில், தன்னுடைய சாவுக்கு யாரும் பொறுப்பில்லை என எழுதப்பட்டிருந்தது.

பொலிசார் நடத்திய விசாரணையில் சமீபத்தில் தான் சுகன்யா விரும்பிய நபருடன் அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது தெரியவந்தது.

அவர் அதிகளவில் அக்கம்பக்கத்தினருடன் பேசமாட்டார் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து சுகன்யாவின் சமூகவலைதள பக்கங்கள் மற்றும் செல்போன் ஆகியவைகளை பொலிசார் ஆராய்ந்து வருகிறார்கள்.

இதோடு அவரின் நண்பர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers