அன்று இலவச பொருட்களை கொளுத்திவிட்டு தற்போது பல்டியடித்த விஜய் ரசிகர்கள்: வைரல் புகைப்படங்கள்

Report Print Raju Raju in இந்தியா

சர்கார் படம் வெளியானபோது இலவசங்களை தீயிட்டு கொளுத்திய விஜய் ரசிகர்கள், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் சர்கார். இந்தப் படத்தில் தமிழக அரசின் இலவசத் திட்டங்களை விமர்சிப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இலவசங்களை தீயிட்டு கொளுத்தும் 5 நொடி காட்சிகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில் சர்கார் படம் வெளியானபோது இலவச பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய் ரசிகர்கள் தற்போது பொங்கல் பரிசுப் பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

அதற்கான புகைப்படங்களை விஜய் மக்கள் இயக்க தலைமை பொறுப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்