உயிரிழந்தும் பூமியில் வாழும் தமிழக பெண் அமுதா: மனதை உருக்கும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் ஏழு பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரின் சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வரும் நாராயணசாமி என்பவரது மனைவி அமுதா (56).

கடந்த 11ம் திகதி ஒரத்தநாடு அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சுய நினைவு இல்லாத நிலையில் தஞ்சை மீனாட்சி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் அமுதா.

பிறகு சுய நினைவு திரும்பாத நிலையில் மூளைச்சாவு அடைந்தார்.

இதனையடுத்து அழுதாவின் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க உறவினர்கள் முன் வந்தனர். இதனை தொடர்ந்து, அவருடைய இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள் (2), கண்கள் (2) மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகள், திருச்சி, சென்னை மற்றும் மதுரையில் உள்ள மருத்துவமனைகளுக்கு, சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

இதன்மூலம் உயிரிழந்தும் தனது உடலுறுப்பு தானத்தால் அமுதா பூமியில் வாழ்கிறார் என்று கூறினால் அது மிகையாகாது!

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்