கூட்டு வன்புணர்வுக்கு இரையான மணப்பெண்: கணவர் எடுத்த வியக்கவைக்கும் முடிவு

Report Print Arbin Arbin in இந்தியா

திருமணம் முடிவான இளம் பெண் கூட்டு வன்புணர்வுக்கு இரையான நிலையில், அவரை திருமணம் செய்ததுடன் குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத்தந்துள்ளார் இளைஞர் ஒருவர்.

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு இச்சம்பவம் நடந்துள்ளது. பெற்றோருடன் பெண் பார்க்க சென்ற அந்த இளைஞருக்கு முதல் பார்வையிலேயே பிடித்துப் போயுள்ளது அந்த இளம் பெண்ணை.

உள்ளூர் வழக்கத்தின் அடிப்படையில் திருமணத்திற்கு முன்னர் நிச்சயிக்கப்பட்ட இருவரும் நேரில் பார்த்து பேச அனுமதி இல்லை என்பதால்,

30 கிலோ மீற்றர் இடைவெளியில் குடியிருக்கும் இருவரும் மொபைலில் பேசி தங்கள் அன்பை வளர்த்துக் கொண்டுள்ளனர்.

ஒருநாள் திடீரென்று மொபைலில் தொடர்பு கொண்ட இளம்பெண் உடனே சந்திக்க வேண்டும் என நிர்பந்தித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோருடன் மணப்பெண்ணின் குடியிருப்புக்கு சென்ற அந்த இளைஞருக்கு காத்திருந்த தகவல் அதிர்ச்சியை அளித்தது.

தம்மை 8 பேர் கொண்ட கும்பல் பலாத்காரத்திற்கு இரையாக்கியதை அவர் கண்ணீருடன் தமது வருங்கால கணவரிடம் பகிர்ந்துள்ளார்.

திருமணம் செய்துகொள்ளும் நிலையில் தாம் இல்லை எனவும், இதை தெரிவிக்கவே அழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளாத அந்த இளைஞர் அவரையே திருமணம் செய்து கொள்வதாகவும், இந்த நிலைக்கு காரணமான அந்த கும்பலை சட்டத்திற்கு முன் நிறுத்துவேன் எனவும் சபதம் எடுத்துள்ளார்.

பின்னர் குடும்பத்தார் மட்டும் அழைக்கப்பட்டு குறித்த பெண்ணையே அந்த இளைஞர் திருமணமும் செய்து கொண்டார்.

தொடர்ந்து தமது மனைவியை துன்புறுத்தியவர்களை கண்டறியும் பணியை தொடங்கினார். ஆனால் எதிரணியினர் அரசியல் செல்வாக்கும் பணபலமும் கொண்டவர்கள் என்பதால் போராட்டம் கடுமையானதாக மாறியது.

இதனிடையே தம்பதிகள் இருவருக்கும் கொலை மிரட்டலும், ஆபாச படங்களை வெளியிடுவதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

மட்டுமின்றி புகாரை வாபஸ் பெறவும் பணம் தேவைக்கு அதிகமாக தருவதாகவு அந்த கும்பல் நேரிடையாக களம் இறங்கியது.

இதனிடையே போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் அந்த 8 பேர் கொண்ட கும்பலை மாவட்ட நீதிமன்றம் விடுவித்தது.

மனம் தளராத அந்த இளைஞர் சுமார் 14 லட்சம் செலவிட்டு வழக்கை உயர் நீதிமன்றம் வரை கொண்டு சென்றார்.

இதனிடையே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து இருவரும் ஒரு முக்கிய முடிவெடுத்தனர். சட்டம் பயின்று தங்கள் வழக்கை வாதிடுவது என்று.

தற்போது இருவரும் சண்டீகட் பகுதிக்கு குடிபெயர்ந்து அங்கே சட்டம் பயின்று வருகின்றனர். தமது மனைவிக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த இளைஞர் பிடிவாதமாக உள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்