மூட்டை மூட்டையாக நாய்க்குட்டிகளின் சடலங்கள்: கொடூர சைகோவை தேடும் பொலிஸ்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் மூட்டை மூட்டையாக நாய்க்குட்டிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் பொலிசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் அமைந்துள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரத்தக்கறையுடன் மூட்டைகள் கிடந்துள்ளன.

மருத்துவமனையில் பணிபுரியும் புதுல்ராய் என்பவர் சந்தேகத்துக்கு இடமான அந்த மூட்டைகளை அவிழ்த்து பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அதில் 15 நாய்க்குட்டிகள் கொலை செய்யப்பட்டு அந்த மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்தன. மேலும், ஒரு மூட்டையில் ஒரு நாய் ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.

இதனையடுத்து உடனே, மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் உத்தரவின் பேரில் கால்நடைத்துறையில் இறந்துபோன நாய்க்குட்டிகளை பரிசோதனை செய்துள்ளனர்.

அதில், அந்த நாய்க்குட்டிகள் அனைத்தும் கட்டிப்போட்டு விஷம் வைத்தும், சாக்கு மூட்டைகளில் அடைத்து வைத்தும் அதன் பின்னர் கொடூரமாக தாக்கியும் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்த சிசிடிவி கமெராக்களில் பதிவான காட்சிகளை வைத்துக்கொண்டு அந்த கொடூர சைக்கோவை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்