முதலாளி திட்டிடாங்க! அம்மன் கோவிலில் தஞ்சமடைந்த பச்சைக்கிளி

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் உரிமையாளர் திட்டியதால் கோபமடைந்த பச்சைக்கிளி அம்மன் கோவிலில் தஞ்சமடைந்துள்து.

கோவையை சேர்ந்தவர் முருகேசன், கடந்த ஒரு ஆண்டாக கிளி ஒன்றை வளர்த்து வந்தார், பொங்கல் பண்டிகையையொட்டி வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது கிளி தொந்தரவு செய்ததால் முருகேசனின் மகன் திட்டியுள்ளார், இதனால் கோபப்பட்ட கிளி அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்றது.

அம்மன் மேல் அமர்ந்து கொண்டு நகரவும் இல்லை, பூசாரி அம்மன் சிலையை அலங்கரித்த போது மட்டும் விலகிக் கொண்டு மீண்டும் அம்மன் மேல் நகர்ந்து கொண்டது.

இதையறிந்த முருகேசன் குடும்பத்தினர் வந்து அழைத்தும் கிளி செல்லாமல் அங்கேயே இருப்பதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்