அவளுக்கு நேர்ந்த கொடுமை... இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாள்: கண்ணீர் வடிக்கும் கணவன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

உத்திரபிரதேச மாநிலத்தில் 35 வயது பெண்மணி ஒருவர் தனது சகோதரனால் இழைக்கப்பட்ட கொடுமைக்கு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மனம் உடைந்து உயிரை மாய்த்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kernalganj பகுதியில் திருமணமான 35 வயது பெண்ணை அவரது சகோதரர் அசோக் குமார் மற்றும் சங்கர் தயார் ஆகிய இருவரும் சேர்ந்து கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசில் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

இதனால் சம்பவம் நடைபெற்ற நாள் முதல் அப்பெண்மணி மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தூக்குபோட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

இதுகுறித்து கணவர் கண்ணீர் மல்க கூறியதாவது, எனது மனைவிக்கு நடந்த கொடுமையை அவளால் தாங்கிகொள்ள முடியவில்லை. புகார் அளித்து 15 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் பொலிசார் வழக்குப்பதிவு கூட செய்யவில்லை.

இதனால், சோகத்தில் இருந்த அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாள் என கூறியுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து நடவடிக்கை எடுக்காத அப்பகுதி காவல் நிலைய பொலிசார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் இதுகுறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers