உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது

Report Print Fathima Fathima in இந்தியா

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது.

2019ம் ஆண்டுக்கான அரசாணையை அரசு வெளியிட்டதும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்தன.

போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. அவையாவன,

  • 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 150 செ.மீ இருக்க வேண்டும்.
  • 55 கிலோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

குறித்த நடைமுறைகள் முடிந்த பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது.

பொங்கலன்று அவனியாபுரத்திலும், மாட்டுப்பொங்கலன்று பாலமேட்டிலும் போட்டிகள் நடந்த நிலையில் இன்று அவனியாபுரத்தில் நடந்து வருகிறது.

இப்போட்டியை வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் ஆட்சியர் நடராஜன் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்ட பின்னர் மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

சுமார் 1400 காளைகள் பங்கேற்கும் இப்போட்டியில், 800 மாடுபிடி வீரர்கள் களத்தில் இருக்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்