திருமணமான அரசியல்வாத பெண்ணுடன் தவறாக இணைத்து பேசப்பட்ட பிரபல நடிகர்: கணவருடன் காவல் நிலையத்தில் புகார்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாசை, அரசியல்வாத பெண் ஒருவருடன் இணைத்து செய்திகள் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் முக்கிய எதிர்க்கட்சியாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இருந்து வருகிறது. இதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ‌ஷர்மிளாவும் தீவிர அரசியலில் இருந்து வருகிறார்.

அவருக்கு தற்போது 45 வயது ஆகிறது. இவரது கணவர் பெயர் அனில்குமார். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ‌ஷர்மிளாவையும், பாகுபலி பட கதாநாயகன் பிரபாசையும் இணைத்து கிசு கிசு செய்திகள் இணைய தளங்களில் வெளியாகின.

இது ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தன்னைப்பற்றி தெலுங்குதேசம் கட்சியினர் வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷர்மிளா புகார் அளித்துள்ளார்.

விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் எங்கள் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் என்னைப்பற்றி தவறான தகவலை பரப்பி வருகிறார்கள், நான் குடும்பத்துடன் கண்ணியமாக வாழ்கிறேன், எனவே இதில் அமைதியாக இருக்க இயலாது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்