பேத்தி வயது சிறுமியை சீரழித்தது ஏன்? தாத்தாவின் பதற வைக்கும் வாக்குமூலம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் கரும்பு தோட்டத்தில் வைத்து இரண்டு மணிநேரம் வன்கொடுமை செய்ததால் 10 வயது சிறுமி இறந்ததாக குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.

தண்டராம்பட்டு அருகே தென் முடியனூரை சேர்ந்த 10 வயது மாணவி சில நாட்களுக்கு முன் கரும்பு தோட்டத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும், இதற்கு கணேசன்(வயது 60) என்பவர் தான் காரணம் என்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தியதில், சம்பவ தினத்தன்று சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

நான் குடிபோதையில் இருந்ததால் தவறான எண்ணம் வந்தது, எனவே சிறுமியை ஏமாற்றி கரும்பு தோட்டத்துக்கு அழைத்து சென்றேன்.

தொடர்ந்து இரண்டு மணிநேரம் அவளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் அதிகளவு ரத்தம் வெளியாகி துடிதுடித்து இறந்தாள்.

இதனால் பயந்து போய் தப்பிஓடி விட்டேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers