கணவரை உயிரோடு எரித்து கொன்ற மனைவி: அதிரவைக்கும் சம்பவத்தின் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கணவரை மனைவி உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் குருஜி மனோர்பாய் (40). இவர் மனைவி புதிபென் (40)

புதிபெண் இரண்டாண்டுகளுக்கு முன்னர் தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிபோயுள்ளார்.

இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் மீண்டும் கணவர் குருஜி வீட்டுக்கு வந்த புதிபென் அவருடன் சேர்ந்து வாழ தொடங்கினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புதிபென் கள்ளக்காதல் தொடர்பாக அவருக்கும், குருஜிக்கும் சண்டை ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த புதிபென் கணவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு கொளுத்தினார்.

பின்னர் வலியால் துடித்த குருஜியை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குருஜி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் பொலிசார் புதுபென் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers