கேள்வி கேட்டவர்களுக்கு பதிலாக வந்த ஆணுறை

Report Print Abisha in இந்தியா

இந்தியாவில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டஇருவருக்கு பதிலாக ஆணுறை வந்தது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

இந்தியாவில் கடந்த 2005 ஆம் ஆண்டில்தான் தகவல் அறியும் உரிமைசட்டம்(right to information act) இயற்றப்பட்டது.

இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்குதேவையான அரசு தொடர்பான தகவல்களை கடிதம் மூலமாகவோ ஆன்-லைன் மூலமாகவோ பெற்று கொள்ளலாம்

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மனோகர் லாலு மற்றும் விகாஸ் சவுத்ரி ஆகியோர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்கள் பகுதியில் நடந்த திட்டங்கள்குறித்து அவர்களின் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விஎழுப்பி இருந்தனர்.

இந்நிலையில் பதிலை எதிர்பார்த்திருந்த அவர்களுக்குஒரு தபால் உறை ஒன்று வந்தது, அதை பிரித்து பார்த்த அவர்கள் அதிர்ந்து போயினர், அதில் பயன்படுத்திய ஆண் உறைகள் இருந்தன.

இது குறித்து அவர்கள் தங்களின் மாவட்ட அதிகரிகளிடம் புகார் அளித்துள்ளனர், புகார் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் விரைவில் இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers