ஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்து கொண்ட தந்தை மற்றும் மகன்: இவ்வளவு அழகான மணமகளா?

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் உள்ள கக்ரா பகுதியில் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்கள்.

அப்படி, ராம்லால் முண்டா என்ற நபரும் ஷகோரி என்ற பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே 30 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களின் மகன் ஜித்தீஷ்வர் என்பவரும் கடந்த இரண்டாண்டுகளாக அருணா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமலேயே அவருடன் வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் NIMMITA என்ற தொண்டு நிறுவனம் இந்த பகுதியில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் தம்பதிகளுக்கு இலவசமாக திருமணம் நடந்த முடிவு செய்தது.

அதன்படி ஒரே நேரத்தில் 132 பழங்குடி தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

இதில் ராம்லால் - ஷகோரி தம்பதி மற்றும் அவர்களின் மகன் ஜித்தீஷ்வர் - அருணா திருமணமும் அடக்கம். இதன்மூலம் தந்தையும், மகனும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.

இது குறித்து ஜித்தீஷ்வர் கூறுகையில், நிதி பிரச்சனையால் தான் என் தந்தை எனது தாயை திருமணம் செய்து கொள்ளவில்லை, நானும் அதனால் தான் அருணாவுடன் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்தேன்.

தற்போது திருமணம் நடந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதை செய்து கொடுத்த தொண்டு நிறுவனத்துக்கு நன்றி என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers