ஒரே நேரத்தில் கர்ப்பமான இரண்டு பள்ளி மாணவிகள்: அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இரண்டு பள்ளி மாணவிகள் கர்ப்பமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் தென்கனல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆஸ்ரம் பள்ளிக்கூடத்தை சேர்ந்த தலைமையாசிரியர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், தங்கள் பள்ளிக்கூடத்தை சேர்ந்த ஒரு மாணவி கர்ப்பமாக இருப்பதாக கூறினார்.

இதையடுத்து பொலிசார் மாணவி மற்றும் அவர் குடும்பத்தாரை அழைத்து ரகசியமாக விசாரித்தனர்.

அந்த மாணவி எந்த சூழலில் கர்ப்பமானார் என்ற விபரம் தெரியாத நிலையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே போல அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவ பரிசோதனையில் மாணவி கர்ப்பமாக இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இரண்டு மாணவிகளின் கர்ப்பம் அவரகளின் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் இது சம்மந்தமாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers