நடிகர் அஜித்குமார் கைதாவாரா? எஃப்.ஐ.ஆர் பதிய வலியுறுத்தல்

Report Print Raju Raju in இந்தியா

விஸ்வாசம் படம் பார்க்க பணம் கொடுக்காத தந்தையை எரித்த சம்பவம், தியேட்டரில் கத்தி குத்து சம்பவங்களை கண்டிக்காத நடிகர் அஜித்குமார் மீது எஃப்.ஐ.ஆர் போட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு பேசியுள்ளார்.

நடிகர் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் திரைப்படமும், ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படமும் கடந்த ஜனவரி 10ஆம் திகதி ரிலீஸ் ஆன நிலையில் வசூலை வாரி குவித்து வருகிறது.

அது ஒருபுறம் இருந்தாலும் இதில் எந்த படம் சிறப்பான வசூலை பதிவு செய்திருக்கின்றன என விவாதம் செய்து வருகின்றன சில தனியார் செய்தி தொலைக்காட்சிகள்.

இந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு என்பவர் பேசும் போது, அண்மையில் வெளியான விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராத தந்தையை மகன் எரித்த சம்பவம், அஜித் கட் அவுட் சரிந்து விபத்து, தியேட்டரில் இருக்கை கிடைப்பதில் பிரச்னையால் கத்தி குத்து என அசம்பாவிதங்கள் நடக்கின்றன.

இதை எல்லாம் தட்டிக் கேட்காத நடிகர் அஜித்குமார் மீது எஃப்.ஐ.ஆர் போட வேண்டும் என பேசியுள்ளார்.

வன்னி அரசின் பேச்சு சமூகவலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers