திருமணமான 2 மாதத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய செளந்தர்யா

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கணவர் 10ம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ளதால் மனமுடைந்த பெண் என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை கலிக்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் நவீன்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி சவுந்தர்யா (23). என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர்களுக்கு இரு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. தலை பொங்கலுக்காக சவுந்தர்யா தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்தார்.

நேற்று மாலை வீட்டில் சவுந்தர்யா மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து பொலிசார் விசாரணை நடத்தினர்.

என்ஜினீயரான சவுந்தர்யாவுக்கு தனது கணவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளது வேதனையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers