பெண்களை பாலியல் தொழிலுக்கு தள்ளிய கயவன்! டிக்டாக், மீயூசிகலி ஆப்களை பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை

Report Print Abisha in இந்தியா

தமிழகத்தில் டிக்டாக் மீயூசிகலி ஆப்கள் மூலம் வீடியோ பதிவிடும் பெண்ணைகளை பாலியல் தொழிலுக்கு இழுக்கும் கயவன் பொலிசில் சிக்கியுள்ளான்.

உலக முழுவதும் நடிகர்களுக்கு பஞ்சமில்லை என்று உணர்த்து வகையில் அனைவரையும் பிரபலமாக்கியது. டிக்டாக், மியூசிகலி ஆப்புகள் தான்.

இது குறித்து ஏராளமான சர்ச்சைகள் இருந்தாலும் பெண்கள் ஆண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களின் நேரத்தை முழுவதும் செலவிட்டு வீடியோக்கள் பதிவு செய்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் தலைநகரமன சென்னையில் பூங்காவெங்கடேசன் என்ற நபர் டிக்டக், மியூசிகலி ஆப்கள் மூலம் வீடியோக்கள் பதிவிடும் பெண்களை குறிவைத்து பாலியல் பேரம் செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தியதில் வீடியோக்கள் பதிவிடும் பெண்களில் நடிக்க ஆசைப்படும் பெண்கள் மற்றும் அழகாக இருக்கும் பெண்களிடம் சேட் செய்து நண்பர்களாக்கி அவர்களின் திறமைக்கு உதவுவதாக கூறி ஏமாற்றி. பெண்களை பாலியல் தொழிலுக்கு பலியாக்கியது தெரியவந்துள்ளது.

இது குறித்து காவல்துறை தரப்பில் வீடியோக்கள் வெளியிடும் பெண்கள் அவர்களே இதுபோன்ற நபர்களிடம் சிக்காமல் உஷாராக இருக்க அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers