20 வயது அதிகமானவரை மணந்த இளம்பெண்..உறவினருடன் ஏற்பட்ட தொடர்பு..நேர்ந்த விபரீத சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் நபர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு வழக்கு குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்தியூர் அருகே, புன்னம் பகுதியை சேர்ந்த லேத்பட்டறை உரிமையாளர் கைலாசம் (40).

இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில், மனைவி ஹேமலதா (21) இரண்டரை வயது மகள் சிவதர்ஷினியுடன் வந்தார்.

காட்டூர் பகுதி அருகே, பின்னால் பைக்கில் வந்த மர்மநபர் கைலாசத்தை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தப்பினார்.

புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைலாசத்தின் மனைவி மற்றும் உறவினர்களிடம், விசாரணை நடத்தினர்.

இதில் அதே பகுதியில், மின்வாரியத்தில் பணியாற்றும் ஹேமலதாவின் பெரியம்மா மகனான திருச்சியை சேர்ந்த ஆனந்த் (23) என்பவருக்கும், ஹேமலதாவுக்கும் தகாத உறவு இருந்தது தெரிந்தது.

ஆனந்த் மீது கடந்த மாதம் பொலிசில் கைலாசம் புகார் அளித்திருந்தார். அதில், தனது மனைவியிடம் தவறாக நடக்கிறார், தகாத உறவில் ஈடுபட முயற்சி செய்கிறார் என தெரிவித்திருந்தார். இதையடுத்து பொலிசார் ஆனந்தை எச்சரித்து அனுப்பினர்.

இது தொடர்பாக ஆனந்த், கைலாசம் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது.

மேலும் ஆனந்த் தான் இந்த கொலையை செய்தார் என தீவிர விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் ஆனந்தை தேடி திருச்சி விரைந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers