51 வயது முதியவரை பெண்ணுடன் சேர்த்து படம் எடுத்து மிரட்டிய நபர்களுக்கு செக்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கோயம்புத்தூரில் கூட்டுறவு சங்க செயலாளரை கடத்தி ஆபாச படம் எடுத்து மிரட்டி ரூ.50 லட்சம் பறித்த 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சரவணகுமார் (வயது 51). இவர் வேலாண்டிபாளையத்தில் உள்ள நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் வீரகேரளம் அண்ணாநகரை சேர்ந்த பத்மநாபன் (42) என்பவர் அடிக்கடி கூட்டுறவு சங்கத்தில் நகை வைத்து கடன் பெற்று வந்தார்.

இதற்கிடையில் பத்மநாபனுக்கு அடிக்கடி பணம் தேவைப்பட்டது. அதற்கு சரவணகுமார் உதவி செய்து வந்தார். ஆனால் பத்மநாபன் ஒழுங்காக பணத்தை திருப்பிக் கொடுக்க வில்லை.

இதனால் சரவணகுமார் கடன் கொடுப்பதை நிறுத்திக்கொண்டார்.

இதன் காரணமாக சரவணகுமார் மீது பத்மநாபனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. மேலும் சரவணகுமாரிடம் லட்சக்கணக்கில் பணம் இருப்பதாகவும், அவரை கடத்தி மிரட்டினால் பணம் கொடுத்து விடுவார் என்றும் பத்மநாபன் முடிவு செய்துள்ளார்,

காரில் வந்த பத்பநாபன் உள்ளிட்ட 6 பேரும் சேர்ந்து சரவணகுமாரை வழிமறித்து காரில் ஆனைகட்டிக்கு கடத்தி சென்றனர். அங்கு ஒரு அறையில் வைத்து சரவணகுமாரை ஒரு பெண்ணுடன் சேர்த்து நிர்வாணமாக படம் எடுத்துள்ளனர்.

அதன்பின்னர் அந்த ஆபாச படத்தை வெளியிடாமல் இருக்க ரூ.50 லட்சம் தரவேண்டும் என்று சரவணகுமாரை 6 பேரும் மிரட்டினார்கள். இதனால் பயந்துபோன சரவணகுமார் தன்னிடம் 25 லட்சம் ரூபாய் மட்டுமே உள்ளது எனக்கூறி அந்த பணத்தை கொடுத்துள்ளார்.

இப்படி மிரட்டியதால் 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத சரவணக்குமார் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பத்மநாபன், நாகராஜ், விஷ்ணுகுமார் ஆகிய 3 பேரை பொலிசார் கைது செய்தனர். கார்த்திகேயன், அய்யப்பன் ஆகிய 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்