மனைவியை இன்னொருவருடன் தொடர்புபடுத்தி பேசிய கணவன்– வெட்டி கொலை

Report Print Abisha in இந்தியா

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் தனது மனைவியை பக்கத்து வீட்டில் உள்ளவருடன் தொடர்புபடுத்தி பேசியதால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கன்னியாகுமரி மாட்டத்தை சேர்ந்தவர் ராஜ், வாகனம் ஓட்டியாக பணியாற்றுகிறார்.

இவரது மனைவியான சுலோக்சனா மீது சந்தேகம் ஏற்பட்டு பக்கத்து வீட்டாருடன் தொடர்பு படுத்தி பேசி வந்துள்ளார், இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து சுலோக்சனா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ராஜ் பக்கத்து வீட்டுகாரர் ஜெயசிங் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயசிங் மற்றும் அவரது உறவினர்கள் நள்ளிரவில் ராஜ் உறங்கும் வேளையில் வீடு புகுந்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகள் தலைமறைவாகி உள்ளனர் என்று பொலிசார் தரப்பில் தேடப்பட்டு வருகின்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்