தொழிலதிபரின் 100 கோடி மதிப்புள்ள பங்களா இடிப்பு

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் வைர வியாபாரி நீரவ் மோடியின் ரூ.100 கோடி மதிப்புள்ள கடலோர பங்களா, ராய்காட் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டது.

வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,400 கோடி கடன் பெற்றுக் கொண்டு, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இதனால் அவருக்கு சொந்தமான நிலங்கள், பங்களாக்கள் உள்ளிட்ட அனைத்து வகையான சொத்துக்களையும் அமலாக்கத்துறை அதிகாரி முடக்கி வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அரசு அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த பங்களாவை இடித்து அகற்ற உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவினை அமலாக்கப்பிரிவு இயக்குநரகத்திற்கு மகாராஷ்டிர அரசு பிறப்பித்தது.

அத்துடன் மும்பையில் கட்டப்பட்டுள்ள பங்களாக்களையும் இடித்து அகற்றவும் அனுமதி கோரப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, நீரவ் மோடிக்கு சொந்தமான ராய்காட் பங்களா மாவட்ட நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ராய்காட் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள பிரம்மாண்ட பங்களா இடித்து அகற்றப்பட்டது. இந்த பங்களா சட்டத்திற்கு புறம்பாகவும், அனைத்து சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்டதால் இடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதேபோல் அலிபாக் மற்றும் முராத் வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 202 கட்டிடங்கள் விரைவில் இடித்து அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers