மனைவி இருக்கும் நிலையில் மற்றொரு பெண்ணுடன் வசித்த நபர்! கொலை செய்து புதைக்க கொண்டு சென்ற கொடூரம்

Report Print Abisha in இந்தியா

டெல்லியில் மரவேலை செய்துவந்த நபர் ஒருவர் லிவ்விங் டு கெதரில் தன்னுடன் வசித்துவந்த பெண்ணை கொலை செய்து உத்தரபிரதேசத்தில் கொண்டு சென்று எரிக்க முற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் மரவேலை தொழில் செய்து வந்த நபர் முகம்மது இன்டெஸார்(வயது32). அவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், 3 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்நிலையில் அவர் மனைவியுடன் சண்டையிட்டு அந்த பகுதியில் கணவனை பிரிந்து வந்த சோனி(28) என்ற பெண்ணுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சோனிக்கும் முகம்மது இன்டெஸார் மனைவிக்கு அடிக்கடிசண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்சனையில் முகம்மது இன்டெஸார் அவரது மனைவிக்கு ஆதரவாக பேசி உள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த சோனி கடும்வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சண்டை முற்றவே இன்டெஸார் கோவம் கொண்டு சோனியை கொலைசெய்துள்ளார். இந்நிலையில் உடலை எங்கு கொண்டு செல்வது என்று தெரியாமல் உத்தரபிரதேஷத்தில்எடுத்து சென்று உடலை புதைக்கலாம் என்று திட்டமிட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த சில தினங்களாக குடியரசு தினத்திற்கு முன்கூட்டியே பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் அவரால் கொண்ட செல்ல இயலவில்லை.

இந்நிலையில் டெல்லியில்இருந்து உத்தரபிரதேசத்திற்கு போகும் வழியில் கழிவுநீர் ஓடையில் போடலாம் என்று முடிவெடுத்து உடலை துணியால் நன்கு கட்டி காரில் எடுத்து சென்றுள்ளார்.

இதனையடுத்து அதை கண்டெடுத்த பொலிசார் தொடர்ந்து அந்த நபரிடம்விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அந்த நபர் தொடர்ந்து அதை மாறுபட்ட வகையில் பேசுவதாகபொலிசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்