காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற காதலன்: சிதறிய ரத்தத்தை பார்த்து அலறிய பொதுமக்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

மும்பை பூங்காவில் திடீரென காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற காதலனை மீட்டு பொலிஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மும்பை Walkeshwar பகுதியை சேர்ந்த குணால் பாவ்டேன் என்கிற இளைஞர் பயண நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

கல்லூரி காலத்தில் தன்னுடன் படித்த ஒரு இளம்பெண்ணை இவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவருக்கும் இடையில் ஒத்துவராத காரணத்தினால், அந்த பெண் குணாலை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த குணால், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அந்த பெண்ணை சஞ்சய் காந்தி தேசிய பூங்கா அருகே வருமாறு செல்போனில் அழைப்பு விடுத்துள்ளான்.

உடனே அந்த பெண்னும் அங்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்குள்ளும் காரசாரமான விவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குணால் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு, அந்த இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளான்.

இதனை பார்த்த பொதுமக்கள் சிலர் அங்கிருந்து பயந்து ஓட ஆரம்பித்துள்ளனர். மற்றவர்கள் இருவரையும் மீட்டு வேகமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் குணால் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாகவும், அந்த பெண் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுவரை எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers