திருமணத்தன்று திடீரென கால்பந்து விளையாட சென்ற மாப்பிள்ளை: மணமகள் கேட்ட அந்த ஒரு கேள்வி!

Report Print Vijay Amburore in இந்தியா

திருமணம் முடிந்த கையோடு புதுமாப்பிள்ளை கால்பந்து விளையாட சென்றுள்ள வினோத சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த ரித்வான் என்பவர் உள்ளூரில் நடைபெறும் ஃபிபா மஞ்சேரி கால்பந்து அணியில் தடுப்பாட்டக்காரராக விளையாடி வருகிறார்.

11 பேருக்குப் பதிலாக 7 பேர் மட்டுமே ஆடும் 7எஸ் போட்டி கேரளாவில் மிகப் பிரபலம். ரித்வானுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த அதேநாளில், மலப்புரம் 7எஸ் போட்டிக்கு இவருடைய அணி தேர்வாகியிருந்தது.

திருமண வேலைப்பாடுகள் அனைத்தும் மிக தீவிரமாக நடந்து வந்ததால், ரித்வானுக்கு என்ன செய்வதென தெரியவில்லை.

திருமண நாளில் மனைவியிடம் 5 நிமிடம் அனுமதி கேட்டுவிட்டு கால்பந்து போட்டிக்கு சென்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்றதோடு, மீண்டும் திருமண நிகழ்ச்சியில் வந்து கலந்துகொண்டார்.

அப்போது மனைவியான புதுமணப்பெண், 'ஒருவேளை கால்பந்துப் போட்டிகள் மதியத்தில் நடைபெற்றிருந்தால், திருமணத்தை நிறுத்தி இருப்பீர்களா?' என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் ரித்வான் முழித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருமணத்துக்கு இடையில் சென்று கால்பந்து விளையாடிய ரித்வானுக்கு, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் பாராட்டு தெரிவித்ததோடு, சந்திக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers