வெளிநாட்டில் கணவன்! இளம் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு.. விஷ ஊசி போட்டு குழந்தையை கொன்ற கொடூரம்

Report Print Raju Raju in இந்தியா

கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் வேறு நபருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக பெற்ற குழந்தையை கொலை செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த வெள்ளநாயக்கனேரியைச் சேர்ந்த

சரவணன் - சந்தியா தம்பதியின் மூன்று வயது மகன் விரோசன் வீட்டில் உயிரிழந்து கிடந்தான்.

செவிலியராகப் பணிபுரியும் சந்தியா ஊசி போட்ட பின்னரே விரோசன் உயிரிழந்ததாக பொதுமக்கள் கூறவே, சந்தியாவையும் அவரது தாயையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று திம்மாம்பேட்டை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையில் காதல் திருமணம் செய்து கொண்ட சந்தியாவின் கணவர் சரவணன் தற்போது வெளிநாட்டில் இருக்கும் நிலையில், சக்கரகுப்பத்தைச் சேர்ந்த பிதாமகன் என்பவருடன் சந்தியாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குழந்தைக்கு சந்தியா விஷ ஊசி போட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...