திருமணநாள் விழாவை அமெரிக்காவில் கொண்டாடிய விஜயகாந்த் - பிரேமலதா

Report Print Arbin Arbin in இந்தியா

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தமது மனைவி பிரேமலதாவுடன் தங்களது 29-வது திருமணநாள் விழாவினை அமெரிக்காவில் கொண்டாடியுள்ளார்.

உடல்நல குறைபாடு காரணமாக சிகிச்சை மேற்கொண்டுவரும் விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் முதற்கொண்டு அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

இருப்பினும் கட்சி தொடர்பான விழாக்களுக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கும் விஜயகாந்தின் வாழ்த்துகலும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில் விஜகாந்த் - பிரேமலதாவின் 29 வது திருமணநாள் விழாவினை முன்னிட்டு இருவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

மட்டுமின்றி விஜயகாந்தின் மகன்களும் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்