திருமணம் முடிந்த அரைமணி நேரத்தில் மண்டபத்திலேயே விவாகரத்து! அதிரவைக்கும் காரணம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணம் முடிந்த அரைமணி நேரத்தில் புதுமண தம்பதிகள் விவாகரத்து செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் கொண்டல் பகுதியில், இரு தினங்களுக்கு முன் ஒரு திருமணம் நடந்தது.

அந்தத் திருமணம் நடந்து முடிந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே விவாகரத்தும் நடைபெற்றுள்ளது.

அதாவது, திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவு தொடர்பாக இரு வீட்டினருக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இந்தக் கருத்து வேறுபாடு பெரும் மோதலாக மாற, மணமகன் வீட்டாரும், மணமகள் வீட்டாரும் உணவைக்கொண்டே மாறி மாறித் தாக்கிக் கொண்டுள்ளனர்.

இது பெரும் சண்டையாக மாற, உடனடியாக பொலிசாருக்கு தகவல் தரப்பட்டது. அதே நேரத்தில், இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் வரவழைக்கப்பட்டு, மண்டபத்திலேயே விவாகரத்தும் செய்யப்பட்டுள்ளது.

இதன்பின்னர், புதுப்பெண் இல்லாமல் மணமகன் மட்டும் தனியாகத் தன் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

மேலும், திருமணத்துக்காக இருவருக்கும் வந்த பரிசுப் பொருள்களையும் தனித் தனியாகப் பிரித்து எடுத்துச்சென்றுள்ளனர்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...