இரவில் ஆபாச வீடியோ போட்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. மேலாளர் கைதானதன் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருக்கும் சிறுமிகளிடம் ஆபாச வீடியோவைப் போட்டுக் காண்பித்து அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பக மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மகாசக்தி நகர் பகுதியில், அரசு அனுமதியின்றி அருணை குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் தனியார் காப்பகம் ஒன்று இயங்கி வந்தது.

இங்கு குழந்தைகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதாகவும், காப்பகத்துக்கு முறையான அனுமதி வாங்கினார்களா எனத் தெரியவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு ரகசிய புகார் சென்றது.

புகாரின் பேரில் அதிரடி சோதனை நடத்தினார் கந்தசாமி. அப்போது காப்பகத்தில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த 15 குழந்தைகளிடம் விசாரித்தபோது, காப்பக மேலாளர் வினோத்குமார் (30) என்பவர் காப்பகத்திலேயே தங்கிக்கொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கண்ணீருடன் கூறியுள்ளனர் சிறுமிகள்.

மேலும், காப்பகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் இரவு நேரத்தில் ஆபாசப் படங்களைப் போட்டுக்காண்பித்து பார்க்கச் சொல்லுகிறார். எங்களிடம் அத்துமீறி நடந்துக்கொள்ள முயற்சி செய்கிறார். இந்தக் கொடுமையை எதிர்த்துக் கேட்டால் காப்பகத்தைவிட்டு வெளியே அனுப்பிவிடுவேன். சோறு தண்ணி இல்லாமல் அலையவிடுவேன் என மிரட்டுகிறார் என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து வினோத்குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தது பொலிஸ்.

மேலும், காப்பகத்தில் தங்கியிருந்த குழந்தைகளை மீட்டு வேறு காப்பகத்துக்கு மாற்ற உத்தரவிட்டார் கந்தசாமி.

இதோடு அனுமதியின்றி சட்டவிரோதமாகக் காப்பகம் நடத்தியதன் நோக்கம் என்ன, இதன் பின்புலத்தில் யாராவது முக்கிய ஆட்கள் இருக்கிறார்களா என விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers