சீமான் கட்சியினர் மீது காதல் ஜோடி பரபரப்பு புகார்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கன்னியாகுமரி மாவட்டத்தில் கலப்பு திருமணம் செய்த இளம் காதல் ஜோடி, தங்களை இயக்குநர் அமீர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் பிரிப்பதற்கு முயற்சிப்பதாக புகார் அளித்துள்ளனர்.

பொறியியல் கல்லூரியில் படித்து வரும் அப்சல் ஜெனிஷ் என்ற மாணவர் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் சுரேகா என்ற பெண்ணை காதலித்து தேவாலயத்தில் வைத்து பதிவு திருமணம் செய்துகொண்டார்.

இதனிடையே தங்களை பிரிப்பதற்காக இயக்குநர் அமீர் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் முயற்சிப்பதாக அப்சல் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

மேலும், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற தங்களது பெற்றோரையும் கடத்தி சென்றுவிட்டதாக அப்சலின் சகோதரி புகார் அளித்துள்ளார்.

இதனிடையே நாகர்கோவில் வந்த இயக்குநர் அமீர், தம் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...